Chettinad Chicken Kulambu

Chettinad Samayal /Chettinad Chicken Kulambu

செட்டிநாடு கோழி குழம்பு

செய்முறை:

முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்

மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும்

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும். அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

இப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய) கோழியை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பைகுறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.சுவையான செட்டிநாடு கோழி குழம்பு தயார்.

Post Free Business Address