★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில்--திருக்கோவர்ணம்
அருள்மிகு பிரகதாம்பாள்-திருக்கோவர்ணம்
செல்லும் வழி

அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம் - 622 002, புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை நகரின் மைய பகுதியிலிருந்து மிக அருகிலேயே இருப்பதால் கோயிலுக்கு பேருந்து, போக்குவரத்து வசதி நிறைய உண்டு.

கோயில் பெருமைகள்

சிவபெருமான் காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவ தலம். கிழக்கு பார்த்திருக்கும் கோகணேஸ்வரர் சன்னதி. குடவரைக் கோயில். பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என்று வரலாற்று கதை ஒன்று கூறுவதால் பிரகதாம்பாளை பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர்.

பாறையின் மீதே கட்டப்பட்ட குடவறைக் கோயில்கள் கொண்ட மிகப் பழமையான கோயில்.

வெல்லம் வைத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தல் சிறப்பு. தவிர மஞ்சள் பொடி, திரவிய பொடி ஆகியவை படைத்து வழிபடலாம். இறைவனுக்கு நைவேத்யம் செய்துவிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். இவை தவிர பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

சிறப்புகள்

சித்திரை கொடி ஏற்றம் - 10 நாள் திருவிழா ஆடிப்பூசம் -11 நாள் திருவிழா புரட்டாசி - நவராத்திரி திருவிழா (அம்பு போடும் திருவிழா)- 10 நாள் திருவிழா. தைப்பூசம் -10 நாள் திருவிழா மாசி திருவிழா - 10 நாள் திருவிழா விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உற்சவம், கந்தர் சஷ்டி விழா, கார்த்திகை தீப விழா, மார்கழி திருவாதிரை ,ஆருத்ரா தரிசனம், தை வெள்ளி , மாசி மகம் , பங்குனி உத்ரம் ஆகிய தினங்களில் கோயிலில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தவிர அமாவாசை, பவுர்ணமி, பிரதோச நாட்களில் கோயிலில் பக்தர்கள் பெருமளவில் கூடுவது வழக்கம்.

இது ஒரு குடவரைக் கோயில். இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால் "அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை' எனக்கூறி சிறிது வெல்லத்தை எடுத்து வைத்து விட்டு தேடினால் உடனே கிடைத்துவிடும்.

 

Photo Gallary


புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை