| வாஸ்து நாட்களில் விசேஷ பூஜை நடக்கும் கோயில்களில் ஒன்று. | |
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் - 622 403, புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் பஸ்களில் சென்றால் குளிபிறை என்ற ஊர் வரும். இங்கிருந்து 3 கி.மீ., தூரத்திற்கு ஆட்டோவில் சென்றால் செவலூரை அடையலாம். தடம் எண் 6 ஏ டவுன் பஸ் அவ்வப்போது வரும்.. அடிக்கடி பஸ் உண்டு.
பூகம்பம், நிலத்தகராறுகள் போன்றவை இத்தலத்து இறைவனை வழிபட்டால் நீங்கும்.
தடைபட்டுள்ள காரியங்கள், தொழிலில் தடை, கட்டட வேலைகளில் பாதிப்பு, விவசாய வளர்ச்சியின்மை, கட்டடம் கட்டும் போது வேம்பு, ஆல், அரசு போன்ற புனித மரங்களை வெட்டியதால் ஏற்பட்ட தோஷம், நாகப்புற்றுகளை அழித்த கொடுமை, கோயில் குத்தகையை கொடுக்காமல் ஏமாற்றியது, தொழில், வியாபாரத்தில் நஷ்டம், பணியில் கஷ்டம் ஆகிய துன்பங்களை அனுபவிப்போர் பூமிநாதருக்கு பூஜை செய்யலாம்.
பூகம்பத்தால் இறந்த ஜீவன்கள் நற்கதியை பெறவும், கோர்ட் வழக்குகள், உறவினர் பகை போன்றவற்றால் தடைப்பட்டுள்ள காரியங்கள், வாஸ்து நாளில் இங்கு வந்து விசேஷ பூஜை செய்பவர்களுக்கு பலன் கிட்டும். வாஸ்து நாளை தவற விட்டால் செவ்வாய்கிழமைகளில் இப்பூஜையை நடத்தலாம்
இத்தலத்து லிங்கம் பல பட்டைகளைக் கொண்டது. பூமாதேவி இந்த லிங்கத்தை பூஜித்த போது, ஒவ்வொரு யுகத்திலும் மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, கஸ்தூரி காப்பு, வெண்ணெய் காப்பு, மூலிகை காப்பு என பலவித காப்புகளை சார்த்தி பூஜித்ததால், இந்த பட்டைகள் உருவானதாக கூறப்படுகிறது.
சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை
![]()
வாஸ்து நாட்களில் விசேஷ பூஜை நடக்கும் கோயில்களில் ஒன்று.