★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில் -- புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் - புதுக்கோட்டை
செல்லும் வழி

அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில் புதுக்கோட்டை 622001

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,.

கோயில் பெருமைகள்

கோயிலை ஒட்டியுள்ள பல்லவன் குளத்தின் தென்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. பெரிய ஆஞ்சநேயர், சிறிய ஆஞ்சநேயர் என இரண்டு விக்ரஹங்கள் உள்ளன. தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும். /p>

பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது. இப்போது ‘சாந்தநாத சுவாமி’ என வழங்கப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகம் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரர் வீற்றிருக்கிறார். நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். கல்விக்கடவுளாக திகழும் இந்த அம்மனை மாணவர்கள் வியாழக்கிழமை வழிபடுவது சிறப்பு.

காசி ராமேஸ்வரம்: காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர்– பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றி வழிபட்டால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனடிப்படையில் இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும்.

ராகுகால துர்க்கை: பிரகாரத்திலுள்ள துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். அறுபத்து மூவர் சன்னதியில் சிவன் ‘காட்சி கொடுத்த நாயனார்’ என்னும் பெயரில் ரிஷபத்தின் மீது காட்சியளிக்கிறார்.

சிறப்புகள்

ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது

இங்கு வழிபடுவோருக்கு ஒருசேர காசி, ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணியபலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை