செல்லும் வழி
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல்-622 002, புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டையில் உள்ள கொப்பனாப்பட்டியில் அமைந்துள்ளது மூலங்குடி.
கோயில் பெருமைகள்
மிகப் பழமை வாய்ந்த சக்தி நிறைந்த மூலங்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். இவ்வாலயத்தில் துர்க்காதேவிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. எல்லா சிவாலயத்திலும் துர்க்காதேவி சிவனுக்கு இடது புறம் இருக்க இவ்வாலயத்தில் மட்டும் சிவனுக்கு வலது புறம் எழுந்து நின்று 18 திருக்கரங்களில் ஆயுதங்களை எந்திக்கொண்டு ஜ்வாலா கேசத்துடன் நவகிரகங்களில் ராகு பகவானை பார்த்த நிலையில் அருள் பாழித்துக்கொண்டு இருக்கிறாள். இத்திருக்கோயிலில் ஸ்தல விருட்சம்மாக விலங்கக்கூடிய வில்வமரமானது ஆலயத்தின் வாயிலில் அமைந்துள்ளது நந்தி தேவரின் பின்புறம் நின்று இருகொம்புகள் நடுவில் பார்க்கும் பொழுது சிவனின் நெற்றிக்கண் தெரிவதுபோல் நந்திதேவரின் முன் புறம் நின்று இரு கொம்புகள் நடுவே பார்க்கும் பொழுது வில்வமரம் தெரியும் வில்வமரத்தில் நின்று நந்தி தேவரைப் பார்க்கும் பொழுது இருக்கொம்புகள் நடுவே சிவபொருமான் மிக அழகாகத் தெரிவது இவ்வாலயத்தின் சிறப்பாகும்
சிறப்புகள்
இவ்வாலயத்தின் வருடத்திற்க்கு ஒரு முறை ஸ்ரீதுர்க்கா தேவிக்கு ஸ்ரீ நவசண்டி ஹோமமானது அதி விமர்சியாக நடைபெறுகிறது இத் திருக்கோவிலில் பௌர்ணமி தினத்தன்று துர்க்கா தேவிக்கு மாலை ஆறு மணியளவில் சிறப்பு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகிறது
நமது நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பானது. நமது ஆலயத்தில் 18 கைகளுடன் அருள் சுறக்கும் முகத்தோடு சிவபெருமானுக்கு வலது புறத்தில் அமைந்து இருக்கும் ஸ்ரீதுர்க்காதேவி நவகிரகத்தில் ராகு பகவானை பார்த்த நிலையில் அருள் பாழிப்பது கோவில் வணப் பகுதியில் அமைந்து இருப்பதும் இத்தலத்தின் பெருமையாகும்