செல்லும் வழி
அருள்மிகு அய்யனார் திருக்கோயில் பனங்குளம்,புதுக்கோட்டை.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது பனங்குளம் பெரிய பாலம் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து சிறிது தூரம் நடைப்பயணத்தில் அமைந்துள்ளது அய்யனார் கோயில்.
கோயில் பெருமைகள்
இங்கே உள்ள திருக்குளம் சிறப்பு வாய்ந்தது. மாசி மக நன்னாளில் இங்கு வந்து நீராடினால், ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! கோயில் நுழைவாயிலில் சுமார் 33 அடி உயரத்தில் அய்யனாரின் குதிரைச் சிலை அமைந்துள்ளது. சுற்றுவட்டார மக்கள், வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் குறித்து அய்யனாரிடம் உத்தரவு கேட்டுப் பெற்ற பிறகே காரியத்தில் இறங்குகின்றனர். கோயிலில் உள்ள சப்தகன்னியர் மிகச் சக்தி வாய்ந்த தெய்வங்கள். மகா சிவராத்திரி நாளில் தீர்த்தக் குளத்தில் நீராடி, அய்யனாரைத் தரிசித்தால், பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும், எனவே அந்த நாளில் சுற்றுப்பட்டு ஊர்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, வணங்கிச் செல்கின்றனர்.
பாலமுருகன், வீரபத்திரம், சன்னாசி, நர்த்தன விநாயகர், கருப்பாயி அம்மன் ஆகியோருக்கும் தனிச்சன்னதிகள் அமைந்துள்ளன.
சிறப்புகள்
மகா சிவராத்திரி, பவுர்ணமி
இக்கோயிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவின்போது, பல வண்ணக் காகிதங்களாலான சுமார் 40 அடி உயரமுள்ள மாலையை பக்தர்கள் இந்தக் குதிரை சிலைக்கு அணிவிக்கின்றனர். அன்று மட்டும் ஆயிரக்கணக்கான காகித மாலைகள் அணிவிக்கப்படுவது தனிச்சிறப்பானது.
மாசி மக நன்னாளில், சந்நிதியில் உள்ள இறைத் திருமேனியில் சூரியக் கதிர்கள் வந்து விழும்.