★ புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது ★ அதிக எண்ணிக்கையில் குகைக்கோயில்கள்,ஆயிரத்திற்க்கு மேற்பட்ட கல்வெட்டுகள், அதிகமான தொல்லியல் பழமைச் சின்னங்கள், அதிகமான ரோம பொன்நானயங்கள் கிடைத்துள்ள இடமென பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை ★
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் -- திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி
செல்லும் வழி

அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி - 622 302, புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்களில் 40 கி.மீ., தொலைவில் உள்ள கறம்பக்குடி என்ற கிராமத்தில் இறங்கி சற்று தூரம் நடந்தால் இத்தலத்தை அடையலாம்.

இக்கோயிலில் இருந்த வன்னிமரமும், கிணறும் மதுரைக்கு சாட்சி சொல்ல சென்று விட்டதால், இக்கோயிலுக்கென தல விருட்சம் கிடையாது. தல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பை இது பெறுகிறது. அதுபோல் இக்கோயிலைச் சுற்றி, கோயிலின் சங்கு ஒலி கேட்கும் தூரத்துக்குள் கிணறு வெட்ட முயற்சித்தால், வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது. கோயில் குளத்தில் இருந்தே சுவாமிக்கு அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது. மழை காலத்தில் குளத்தில் தண்ணீர் அதிகமாக இருக்கும்.

கோயிலில் உள்ள குளத்து நீருக்கு விஷத்தை முறிக்கும் சக்தியுண்டு என நம்பப்படுகிறது. சுவாமிக்கு திருமணநாதர் என்ற பெயரும் உள்ளது.

நந்தியின் சிறப்பு: எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் (தானாக தோன்றியவர், சிற்பி செதுக்காத சிலை) என்பதால் சக்தி அதிகம். இதனால் நந்திக்கு தனி மண்டபம் இல்லை. தரையிலேயே அமர்ந்துள் ளார். இவரை வணங்கி அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.

புலவருக்கு அருள்: காளமேகப்புலவர் இத் தலத்து இறைவனை வணங்க வந்த போது அக்னி ஆற்றை கடும் வெயிலில் கடந்தார். கால் சூடு தாங்காமல், திருமணநாதரைக் குறித்து பாடல் பாடினார். இறைவன் இவரது பக்தியை மெச்சி ஆற்றில் திடீரென தண்ணீர் வரச் செய்தார். ஜில்லென்ற ஆற்றில் இவர் இனிமையாய் நடந்து வந்தார். வறட்சி வராமல் தடுக்கவும் இவரை பிரார்த்திக்கலாம். அர்த்தநாரீஸ்வரர் சிற்பமும் இக்கோயிலில் உள்ளது திருமணத்தலம் என்பதற்கு மற்றொரு சான்றாகும். வாழ்க்கையில் இணைபவர்கள் கருத்தொருமித்து வாழ வேண்டும் என்பதற்கு இது சாட்சியாக உள்ளது

சிறப்புகள்

இகோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் அக்னியாறு ஓடுகிறது. இந்நதியில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும். அவ்வாறு வந்து இதில் நீராடும் பாக்கியம் கிடைத்தால் அஞ்ஞானம் (அறியாமை) அழியும் என்பது நம்பிக்கை

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் கோயிலுக்குள் கொடி மரத்தின் அருகில்தான் இருப்பார். ஆனால், இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு முன்னால் நந்தி தேவர் உள்ளார். இவர் சுயம்புவாக எழுந்தருளியவர் (தானாக தோன்றியவர், சிற்பி செதுக்காத சிலை) என்பதால் சக்தி அதிகம். இதுதல விருட்சம் இல்லாத சிவாலயம் என்ற சிறப்பை பெறுகிறது. இக்கோயிலைச் சுற்றி, கோயிலின் சங்கு ஒலி கேட்கும் தூரத்துக்குள் கிணறு வெட்ட முயற்சித்தால், வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது.

சித்திரை மாதப்பிறப்பு, வைகாசி விசாகம் பத்துநாள் விழா, ஆனி திருமஞ்சனம், ஆடிப்பெருக்கன்று புதுமணத்தம்பதிகள் கூடும் விழா ஆகியவை முக்கியமானவை

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் இத்தலத்தில் நந்தியும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

Photo Gallery


புதுக்கோட்டை மாவட்ட கோயில்
அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில், திருக்கோவர்ணம், புதுக்கோட்டை
அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு புவனேஸ்வரி திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை
அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோயில், ஆவுடையார்கோயில்
அருள்மிகு அய்யனார் திருக்கோயில்,, பனங்குளம், புதுக்கோட்டை.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், குமரமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கண்ணனுார், புதுக்கோட்டை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை
அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில், செவலூர், புதுக்கோட்டை
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், தொண்டைமான் நல்லூர், புதுக்கோட்டை
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில், நேமம், புதுக்கோட்டை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில், மீமிசல், புதுக்கோட்டை
அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில், ராங்கியம் உறங்காப்புளி, புதுக்கோட்டை
அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோயில், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கொன்னையூர், புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அரிமளம், புதுக்கோட்டை
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பேரையூர், புதுக்கோட்டை
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை
அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், மலையடிப்பட்டி, புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம், புதுக்கோட்டை
அருள்மிகு சண்முக நாதர் திருக்கோயில், விராலிமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில், குடுமியான்மலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் கோயில், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை
அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேங்கைவாசல், புதுக்கோட்டை
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், திருவப்பூர், புதுக்கோட்டை
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில், நார்த்தாமலை, புதுக்கோட்டை
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில புதுக்கோட்டை