செல்லும் வழி
அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மலையக்கோயில் புதுக்கோட்டை
புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், நமணசமுத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் மலையக் கோவில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் பேருந்துகள், மலையக்கோவில் விளக்கில் நிற்கிறது. அங்கிருந்து ஒன்றரை கி.மீ தூரம் நடந்தால், மலையக்கோவிலை அடையலாம். ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.
கோயில் பெருமைகள்
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலுள்ளது மலையக்கோயில். மலைக்கு மேலுள்ளது மலைக்கோயில் என்றும், அடிவாரத்தில் அமைந்திருப்பது கீழ்க்கோயில் என்றும் அழைக்கப்படுகின்றன. அடிவாரத்தில் கிழக்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன.
கிழக்குக்கோயிலின் கருவறையில், மலைப் பாறையிலேயே செதுக்கப்பட்ட லிங்கமும் அதன் எதிரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் திருமேனி யும் அற்புதப் படைப்புகள். தெற்குக் குடைவரைக் கோயிலில் மேற்குநோக்கி அருளும் சிவனாரை வழிபட்டால் பிரமஹத்தி தோஷம் நீங்கும்.
மலைக்குமேல் சுப்பிரமணிய ஸ்வாமி கோயில் கொண்டிருக்கிறார். மேலே செல்ல சாரப் பாதை, படிவெட்டுப் பாதை என இரண்டு பாதைகள் இருக்கின்றன. பக்தர்கள் பெரும்பாலும் படிவெட்டுப்பாதையில் ஏறி, தரிசனம் முடிந்ததும் சாரப்பாதையில் இறங்குகின்றனர். திருப்படித் திருவிழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக நடைபெறும். முருகன் சந்நதிக்கு அருகேயுள்ள சரவணப் பொய்கை எனும் சுனையின் நீர், தீராத நோயையும் தீர்க்கும் அருமருந்து என்கிறார்கள்.
சிறப்புகள்
திருவிழா
குழந்தை வரம் கிடைக்கும்! - மலையக்கோவில் மகிமை
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இத்தல முருகனை மனமுருகி வேண்டிக்கொள்ள, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அப்படி வரம்பெற்ற பக்தர்கள் நன்றிக்கடனாகக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்த தகவலை யும் அறிய முடிகிறது. பிணி தீர்க்கும் பெருமானாகவும் திகழ்கிறார் இவ்வூர் முருகன்.