செல்லும் வழி
அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம், காரைக்குடி, புதுக்கோட்டை
புதுக்கோட்டையில்இருந்து 40 கி.மீ., தூரம் உள்ள காரைக்குடி சென்று, கீழச்செவல் பட்டி, ராங்கியம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் நேமம் உள்ளது.
கோயில் பெருமைகள்
கயிலாயத்திலிருந்து பொதிகை சென்று கொண்டிருந்த அகத்தியர் இத்தலப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றுள்ளார். இக்கோயில் தூண்களில் வித்தியாசமான வடிவமைப்பில் பல சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன. விநாயகரைப் போல் தலையும், கழுத்திலிருந்து இடுப்பு பகுதி வரை பெண் வடிவமும், ஒரு பாதம் எருது வடிவிலும், மற்றொரு பாதம் சிம்ம வடிவிலும் கொண்ட ஒரு சிற்பம் கண்ணைக் கவர்வதாக உள்ளது. கருவறை அருகில் ஆவுடையின் மேல் விநாயகர் இருக்கிறார். மீனாட்சி திருக்கல்யாண கோலம், காலசம்ஹார மூர்த்தி, ஊர்த்துவதாண்டவம், மார்கண்டேயர் சிற்பங்கள் அழகுற செதுக்கப் பட்டுள்ளன
மாலை சாத்தி வழிபாடு: சிவன் மன்மதனை வெற்றி கொண்ட ஸ்தலம் என்பதால், தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வரும் இடையூறுகளைக் கடந்தும், கல்வியில் முதலிடம் பெறவும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் வெல்லவும் இங்கு சிறப்பு வழிபாடு செய்யலாம். சுவாமி, அம்பாள், விநாயகர், நந்தி, கல்யாணகந்தர், உற்சவ மூர்த்தி, வைரவர் ஆகிய ஏழு சுவாமிகளுக்கும் மாலை சாத்த வேண்டும். பலன் கிடைத்தவுடன் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மேற்கு நோக்கிய வைரவர்: கோயில் முன்பு 66 அடி உயரத்தில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பொதுவாக தெற்கு நோக்கி காட்சியளிக்கும் வைரவர் (பைரவர்) இங்கு மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அத்துடன் ஜெயங்கொண்ட விநாயகர், வில்லேந்திய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகளும் உள்ளன. கோயில் முன்புள்ள சோழதீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபடுவதால் திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தைப்பேறும் கிடைப்பதாகவும் நம்பிக்கையுள்ளது.
சிறப்புகள்
திருவிழா:
பிரதோஷம், சிவராத்திரி
“ இத்தல விநாயகர் ஆவுடையில் வீற்றிருப்பது எங்கும் காணாத தனி சிறப்பு